1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
|
<!DOCTYPE HTML PUBLIC "-//W3C//DTD HTML 4.01 Transitional//EN"
"http://www.w3.org/TR/html4/loose.dtd">
<html>
<head>
<meta http-equiv="Content-Type" content="text/html; charset=utf-8">
<link rel="icon" type="image/ico" href="/tools/dlpage/res/chrome/images/chrome-16.png"><title>Google Chrome சேவை விதிமுறைகள்</title>
<style>
body { font-family:Arial; font-size:13px; }
</style>
<script type="text/javascript">
function carry_tracking(obj) {
var s = '(\\?.*)';
var regex = new RegExp(s);
var results = regex.exec(window.location.href);
if (results != null) {
obj.href = obj.href + results[1];
} else {
s2 = 'intl/([^/]*)';
regex2 = new RegExp(s2);
results2 = regex2.exec(window.location.href);
if (results2 != null) {
obj.href = obj.href + '?hl=' + results2[1];
}
}
}
</script></head>
<body>
<h3>Google Chrome சேவை விதிமுறைகள்</h3>
<p>Google Chrome இன் இயங்கும் குறியீட்டு பதிப்பிற்கு இந்த சேவை விதிமுறைகள் பொருந்தும். <a href="http://code.google.com/chromium/terms.html">http://code.google.com/chromium/terms.html</a> இல் உள்ள ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிம ஒப்பந்தங்களின் கீழ் கட்டணம் இன்றி, Google Chrome க்கான மூல குறியீடு கிடைக்கும்.</p>
<p><b>1. Google உடனான உங்கள் உறவு</b></p>
<p>1.1 Google இன் தயாரிப்புகள், மென்பொருள், சேவைகள் மற்றும் வலைத்தளங்களை (மொத்தமாக இதன் பின்னர் “சேவைகள்” என்று குறிக்கப்படும், இவற்றில் Google உங்களுக்கு தனிப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ் அளித்தவை அடங்காது) பயன்படுத்துவது உங்களுக்கும் Google க்கும் இடையேயான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது. "Google” என்பது Google Inc.,ஐ குறிக்கும் இதன் தலைமை வர்த்தக இடம் 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States. ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ள விதத்தையும், ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளையும் இந்த ஆவணம் விவரிக்கிறது.</p>
<p>1.2 Google உங்களுடன் எழுத்துபூர்வமாக ஒப்புக்கொள்ளாதவரை, Google உடனான உங்கள் ஒப்பந்தத்தில், குறைந்தபட்சம் இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளும் நிபந்தனைகளும் எப்போதும் உள்ளடங்கும். “உலகளாவிய விதிமுறைகள்” என இவை இதன் பின்னர் குறிப்பிடப்படும். Google Chrome மூலக் குறியீட்டிற்கான ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் உரிமங்கள், எழுத்துபூர்வமான தனி ஒப்பந்தங்களாக உள்ளன. ஓபன் சோர்ஸ் மென்பொருள் உரிமங்கள், இந்த உலகளாவிய விதிமுறைகளை குறிப்பிட்ட வரம்புக்குள் மீறி அமையும்போது, அவை Google Chrome அல்லது Google Chrome இன் குறிப்பிட்ட உறுப்புகளின் பயன்பாட்டுக்கான, Google உடனான உங்கள் ஒப்பந்தத்தை அவை கட்டுப்படுத்தும்.</p>
<p>உலகளாவிய விதிமுறைகளுடன் சேர்த்து, இந்த சேவைகளுடன் பொருந்தும் எந்த சட்டப்பூர்வ அறிக்கைகளின் விதிகளும் Google உடனான உங்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கும். “கூடுதல் விதிமுறைகள்” என இவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. சேவைக்கு கூடுதல் விதிமுறைகள் பொருந்தும் இடங்களில், அந்த சேவைக்குள்ளாகவோ அல்லது அந்த சேவையைப் பயன்படுத்தும்போதோ அவற்றை நீங்கள் படிக்க முடியும்.</p>
<p>1.4 கூடுதல் விதிமுறைகளும் அதனுடன் இணைந்த உலகளாவிய விதிமுறைகளும் சேர்ந்து, உங்களுக்கும் Google க்கும் இடையே சேவைகளின் பயன்பாட்டை சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை உருவாக்குகிறது. இவற்றை நேரம் செலவழித்து நீங்கள் படிப்பது மிகவும் அவசியம். மொத்தமாக, இந்த சட்டப்பூர்வ ஒப்பந்தமானது கீழே "விதிமுறைகள்" என்று குறிப்பிடப்படுகிறது.</p>
<p>1.5 கூடுதல் விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும், உலகளாவிய விதிமுறைகளில் உள்ளவற்றுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், குறிப்பிட்ட அந்த சேவையுடன் தொடர்புடைய கூடுதல் விதிமுறை முன்னிலை பெறும்.</p>
<p><b>2. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்</b></p>
<p>2.1 சேவைகளைப் பயன்படுத்த நீங்கள் முதலில் விதிமுறைகளுக்கு உடன்படுவது அவசியம். விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நீங்கள் சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.</p>
<p>2.2 பின்வரும் முறைகளில் விதிமுறைகளை நீங்கள் ஏற்கலாம்:</p>
<p>(அ) எந்தவொரு சேவையின் பயனர் இடைமுகத்தில் Google மூலம் அளிக்கப்படும், விதிமுறைகளை ஏற்கிறேன் அல்லது உடன்படுகிறேன் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம்; அல்லது</p>
<p>(ஆ) சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம். இந்நிலையில், சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறீர்கள் என Google கருதும் என புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>2.3 (அ) நீங்கள் Google உடன் பிணைக்கும் உடன்படிக்கையை செய்துகொள்வதற்கான சட்டப்பூர்வ வயதுள்ளவர் இல்லை, (ஆ) அமெரிக்கா அல்லது, நீங்கள் வசிக்கும் நாடு அல்லது சேவைகளைப் பயன்படுத்தும் நாட்டின் சட்டங்களின் கீழ் அவற்றைப் பயன்படுத்த உங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால், சேவையைப் பயன்படுத்தக் கூடாது மற்றும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளக் கூடாது:</p>
<p>2.4 தொடர்வதற்கு முன், உங்கள் பதிவுகளுக்காக உலகளாவிய விதிமுறைகளை நீங்கள் அச்சிட்டுக்கொள்ள வேண்டும் அல்லது அதன் நகலை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ள வேண்டும்.</p>
<p><b>3. விதிமுறைகளின் மொழி</b></p>
<p>3.1 விதிமுறைகளின் ஆங்கில மொழிப்பதிப்பை மொழிபெயர்ப்பு செய்து Google உங்களுக்கு வழங்குகிறது, இது உங்கள் வசதிக்காகவே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கிறீர்கள் மேலும் Google உடனான உங்கள் உறவை விதிமுறையின் ஆங்கில மொழிப் பதிப்புகளே கட்டுப்படுத்தும்.</p>
<p>3.2 விதிமுறைகளின் ஆங்கிலப் பதிப்பிற்கும், அதன் மொழிபெயர்ப்பிற்கும் இடையே முரண்பாடு ஏற்படும்போது, ஆங்கில மொழிப் பதிப்பு முன்னிலை பெறும்.</p>
<p><b>4. Google அதன் சேவைகளை வழங்குதல்</b></p>
<p>4.1 உலகம் முழுவதும் துணைநிறுவனங்களும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்புகளையும் Google கொண்டுள்ளது (“துணை நிறுவனங்கள் மற்றும் சார் நிறுவனங்கள்”). சில நேரங்களில் இந்த நிறுவனங்கள் Google சார்பாக உங்களுக்கு சேவைகளை வழங்கும். துணை மற்றும் சார் நிறுவனங்கள் சேவைகளை உங்களுக்கு வழங்குவதற்கான உரிமை உடையவை என்பதை நீங்கள் அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>4.2 தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க, Google, தொடர்ந்து புதுமையைப் புகுத்திக்கொண்டிருக்கிறது. Google வழங்கும் சேவைகளின் அமைப்பு மற்றும் இயல்பானது, உங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் அளிக்கப்படாமல் காலத்துக்கேற்ப மாறக்கூடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதோடு அதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.</p>
<p>4.3 இந்த தொடர் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக, Google தனது சேவையை (அல்லது சேவைகளில் உள்ள ஏதேனும் ஒரு அம்சத்தை) வழங்குவதை (தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக) , உங்களிடம் தெரிவிக்காமல் எந்நேரத்திலும் நிறுத்திக் கொள்வது Google இன் தனிப்பட்ட அதிகாரத்திற்குட்பட்டது. நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். சேவைகள் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்த வேண்டுமெனில், Google க்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. </p>
<p>4.4 உங்கள் கணக்கிற்கான அணுகலை Google முடக்கினால், சேவைகள், உங்கள் கணக்கு விவரங்கள் அல்லது வேறு எந்த வகையான கோப்புகள், அல்லது உங்கள் கணக்கிலுள்ள வேறு எந்த வகையான உள்ளடக்கங்களையும் அணுக முடியாது என்பதை அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>4.5 Google தற்போது அதன் எந்த சேவைகளின் வழியாகவும் உங்களுடைய பரிமாற்றங்கள் அல்லது சேமிக்கும் இடம் ஆகியவற்றுக்கான எந்த வித உச்ச வரம்பையும் இதுவரை நிர்ணயிக்கவில்லை, இவ்வகையான நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்புகள் எந்த நேரத்திலும் வைக்கப்படலாம், மேலும் அது Google இன் தனிப்பட்ட சுதந்திரத்தை சார்ந்தது என்பதை நீங்கள் அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><b>5. சேவைகளை நீங்கள் பயன்படுத்தும் விதம்</b></p>
<p>5.1 குறிப்பிட்ட சில சேவைகளை அணுக, சேவைக்கான பதிவு பெறுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக அல்லது நீங்கள் தொடர்ந்து சேவைகளைப் பயன்படுத்துவதற்காக, உங்களைப் பற்றிய சில விவரங்களை அளிக்குமாறு கேட்கப்படுவீர்கள் (உங்கள் அடையாளம் அல்லது தொடர்பு விவரங்கள் போன்றவை). இவ்வகையான பதிவு பெறுதல்களில் Google க்கு நீங்கள் தரும் எந்த விவரமும் சரியானது, துல்லியமானது மற்றும் சமீபத்தியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>5.2 சேவைகளை பின்வருவனவற்றால் அனுமதிக்கப்படும் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள், (அ) விதிமுறைகள் மற்றும், (ஆ) அந்தந்த அதிகார வரம்புகளுக்கு உட்பட்ட செல்லுபடியாகும் சட்டம், ஒழுங்கு அல்லது பொதுவாக ஏற்கப்பட்ட நடைமுறைகள் அல்லது வழிமுறைகள் (ஐக்கிய நாடுகள் அல்லது தொடர்புடைய மற்ற நாடுகள் ஆகியவற்றுக்கு அல்லது அவற்றிலிருந்து தரவு அல்லது மென்பொருள் ஏற்றுமதி தொடர்பான சட்டங்களையும் உள்ளடக்கியது).</p>
<p>5.3 தனிப்பட்ட ஒப்பந்தத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தால் தவிர, Google ஆல் வழங்கப்பட்ட இடைமுகத்தின் மூலம் தவர வேறு வழிமுறைகளில் சேவைகளை அணுக (அல்லது அணுக முயற்சிக்க) மாட்டீர்கள் என்று ஒப்புக் கொள்கிறீர்கள். தானியங்கியாக செயல்படும் எந்தவொரு தொடர்புடைய நிரலிலிருந்தும் (ஸ்கிரிப்ட்கள் அல்லது வெப் க்ராவ்லர்ஸ் பயன்பாடு உட்பட) அணுக (அணுக முயற்சிக்க) மாட்டேன் என்பதாக ஒப்புகொண்டிருக்கிறீர்கள். மேலும் சேவைகளில் இருக்கும் robots.txt கோப்பிலிருக்கும் எந்த வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போவதாகவும் உறுதியளிக்கிறீர்கள்.</p>
<p>5.4 சேவைகள் (அல்லது சேவைகளுடன் இணைந்துள்ள சர்வர்கள் அல்லது நெட்வொர்க்குகள்) ஆகியவற்றில் குறுக்கிடும் அல்லது ஆகியவற்றுக்கு தொல்லை தரக்கூடிய எந்த வகையான செயலிலும் ஈடுபட மாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>5.5 Google ஆல் முறையாக தனியான ஒப்பந்தத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தால் தவிர, எந்தவொரு நோக்கத்திற்காகவும் சேவைகளை மீளுருவாக்கம், நகலாக்கம், விற்பனை, வணிகம் அல்லது மறுவிற்பனை செய்ய மாட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>5.6 விதிமுறைகள் மீறல்கள் அல்லது மீறல்களைச் சார்ந்து ஏற்படும் எந்த வகையான தொடர்விளைவுகள் (Google க்கு ஏற்படும் இழப்பு அல்லது நட்டம் ஆகியவற்றையும் சேர்த்து) ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே (உங்களுக்கு அல்லது எந்த மூன்றாம் தரப்புக்கும் Google பொறுப்பாகாது) பொறுப்பாவீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><b>6. கடவுச்சொற்கள் மற்றும் கணக்கு பாதுகாப்பு</b></p>
<p>6.1 சேவைகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் எந்த கணக்கிற்கும் தொடர்புடைய கடவுச்சொற்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றுவதற்கு, நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதை புரிந்து கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>6.2 அதே போல, உங்கள் கணக்கின் கீழ் நிகழும் அனைத்து செயல்களுக்கும் நீங்கள் மட்டுமே Google க்கு பொறுப்பாவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>6.3 உங்கள் கடவுச்சொல் அல்லது கணக்கின் அங்கீகாரமற்றப் பயன்பாட்டை நீங்கள் அறிய நேர்ந்தால், உடனடியாக அதை Google க்கு பின்வரும் முகவரியில் தெரிவிக்க ஒப்புக்கொள்கிறீர்கள்: <a href="http://www.google.com/support/accounts/bin/answer.py?answer=48601">http://www.google.com/support/accounts/bin/answer.py?answer=48601</a>.</p>
<p><b>7. தனியுரிமை மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்</b></p>
<p>7.1 Google இன் தரவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி அறிய, Google இன் தனியுரிமைக் கொள்கைகளை பின்வரும் முகவரியில் காண்க <a href="http://www.google.com/privacy.html">http://www.google.com/privacy.html</a>. நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை Google எவ்விதம் பராமரிக்கிறது என்பதையும், உங்கள் ரகசியத்தை எவ்விதம் பாதுகாக்கிறது என்பதையும் இந்தக் கொள்கை விவரிக்கிறது.</p>
<p>7.2 Google இன் தனியுரிமைக் கொள்கைகளுக்கு உட்பட்டு தரவின் பயன்பாடு இருக்குமென ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><b>8. சேவைகளில் உள்ள உள்ளடக்கங்கள்</b></p>
<p>8.1 சேவையின் ஒரு பகுதியாக அல்லது சேவையின் மூலமாக நீங்கள் அணுகும் எல்லா தகவல்களும் (தரவு கோப்புகள், எழுதப்பட்ட உரைகள், கணினி மென்பொருள், இசை, ஒலிக்கோப்புகள் அல்லது மற்ற ஒலிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது மற்ற படங்கள் போன்றவை) அவற்றை உருவாக்கிய நபரின் பொறுப்பிற்குரியது. இதன் பின் மேற்கூறிய விவரங்கள் "உள்ளடக்கம்" என குறிப்பிடப்படும்.</p>
<p>8.2 சேவைகளின் ஒரு பகுதியாக உங்களுக்கு வழங்கப்படும், சேவைகளிலுள்ள விளம்பரங்கள் மற்றும் சேவைகளுக்குள்ளே ஆதரிக்கப்படும் பிற உள்ளடக்கங்கள், அந்தந்த உள்ளடக்கங்களை Google க்கு வழங்கும் விளம்பரதாரர்கள் அல்லது வழங்குபவர்கள் (அல்லது அவர்கள் சார்பில் வழங்கும் நபர்களால் அல்லது நிறுவனங்களால்) அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். இவ்வகை உள்ளடக்கங்களில் நீங்கள் மாற்றம், வாடகை, குத்தகை, விற்பனை, விநியோகம் அல்லது உள்ளடக்கங்களை சார்ந்து (முழுமையாக அல்லது பகுதியாக) சார்தயாரிப்புகள் உருவாக்குதல் ஆகியவற்றை தனியான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் Google அல்லது உள்ளடக்கத்தின் உரிமையாளர்களால் கேட்கப்பட்டிருந்தால் தவிர செய்யக் கூடாது.</p>
<p>8.3 எந்தவொரு சேவையிலிருந்தும் எந்த ஒரு அல்லது அனைத்து உள்ளடக்கத்தையும் முன்-திரையிடுவதற்கு, மதிப்பாய்வு செய்வதற்கு, கொடியிடுவதற்கு, திருத்துவதற்கு அல்லது நிராகரிப்பதற்கான உரிமை Google க்கு உள்ளது (ஆனால் அதற்கான நிர்பந்தம் இல்லை). சில சேவைகளில், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கத்தை தடுப்பதற்கு Google கருவிகளை வழங்கலாம். இந்த கருவிகள் பாதுகாப்பான தேடல் முன்னுரிமை அமைப்புகளையும் சேர்த்தது (<a href="http://www.google.com/help/customize.html#safe"> http://www.google.com/help/customize.html#safe</a> ஐக் காண்க). கூடுதலாக, ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கம் என நீங்கள் அறியும் தகவலுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் சேவைகள் மற்றும் மென்பொருள் ஆகியவை வணிகரீதியில் கிடைக்கின்றன.</p>
<p>8.4 சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தவறான, நாகரீகமற்ற, அல்லது ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை புரிந்துகொண்டு, சொந்த விருப்பத்தின் பேரில்தான் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.</p>
<p>8.5 நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது உருவாக்கும், பகிர்ந்து கொள்ளும், அல்லது வெளிப்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் உங்கள் செயல்களினால் உருவாகும் தொடர் விளைவுகள் ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே (Google க்கு ஏற்படும் இழப்பு அல்லது நட்டம் ஆகியவற்றையும் சேர்த்து) பொறுப்பாவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><b>9. உரிமையுடைமை உரிமைகள்</b></p>
<p>9.1 சேவைகளில் மற்றும் சேவைகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகள் (அவ்வுரிமைகள் பதிவு செய்யப்பட வேண்டியவையாக இருந்தாலும் அவ்வாறு இல்லாவிட்டாலும், உலகின் எந்த இடத்திலும் இவ்வுரிமைகள் இருந்தாலும்) உட்பட அனைத்து சட்டரீதியான உரிமைகள், சாதனபத்திரம் மற்றும் சேவைகள் தொடர்பான ஆர்வம் ஆகியவை Google க்கு (அல்லது Google இன் உரிமதாரர்களுக்கு) சொந்தமானது என்பதை நீங்கள் அறிந்து ஒப்புக் கொள்கிறீர்கள். Google ஆல் ரகசியமானது என்று தீர்மானிக்கப்பட்ட தகவலை சேவைகள் கொண்டிருக்கக்கூடும் என்பதையும் அவ்வகை தகவலை முன்பே Google வழங்கிய எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிடமாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>9.2 Google இன் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, Google இன் வணிகப்பெயர்கள், வணிக முத்திரைகள், சேவை முத்திரைகள், லோகோக்கள், களப்பெயர்கள் அல்லது மற்ற தனிப்பட்ட தயாரிப்பு அம்சங்களைப் பயன்படுத்த விதிமுறையின் எந்த பகுதியிலும் உங்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை.</p>
<p>9.3 Google உங்களுக்கு இந்த தயாரிப்பு அம்சங்களில் ஏதேனும் ஒன்றைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை வழங்கியிருந்தால், அந்த ஒப்பந்தம், பொருந்தக்கூடிய விதிமுறை மற்றும் Google இன் தயாரிப்பு அம்ச பயன்பாட்டு வழிகாட்டுதல்கள் ஆகியவற்றுக்கு இணங்கி அது போன்ற அம்சங்களைப் பயன்படுத்துவீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள். <a href="http://www.google.com/permissions/guidelines.html"> http://www.google.com/permissions/guidelines.html</a> (அல்லது வெவ்வேறு நேரங்களில் இந்த நோக்கத்திற்காக Google வழங்கும் பிற URL முகவரிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்).</p>
<p>9.4 பிரிவு 11 இல் வரையறுக்கப்பட்டுள்ள வரம்புடைய உரிமம் தவிர்த்து, இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள சேவைகளில் நீங்கள் சமர்பிக்கும், அஞ்சல் செய்யும், பரிமாறும் அல்லது வெளியிடும் எந்த உள்ளடக்கத்திலும், சாதனபத்திரம் மற்றும் நீங்கள் வழங்கிய (அல்லது உங்கள் உரிமதாரர் வழங்கிய) விவரங்கள், அந்த உள்ளடக்கங்கள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் (அவ்வுரிமைகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது இல்லாவிட்டால் மற்றும் உலகின் எந்த இடத்திலும் இந்த உரிமைகள் இருந்தாலும்) ஆகியவை தனக்கு இல்லை என்பதை Google அறிந்துள்ளதுடன் ஒப்புக்கொள்கிறது. Google ஒப்புக்கொள்ளாதவரை அல்லது எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளாதவரை, அந்த உரிமைகளை பாதுகாப்பதும் செயல்படுத்துவதும் உங்கள் பொறுப்பு என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், உங்கள் சார்பாக எதுவும் செய்ய வேண்டிய நிர்பந்தம் Google க்கு இல்லை.</p>
<p>9.5 சேவைகளில் இணைக்கப்பட்டுள்ள அல்லது சேவைகளில் உள்ள எந்த உரிமையுடைமை உரிமை அறிக்கைகள் (பதிப்புரிமை மற்றும் வணிகமுத்திரை அறிக்கைகள் ஆகியவற்றையும் சேர்த்து) நீங்கள் நீக்கவோ, மறைக்கவோ, அல்லது மாற்றவோ மாட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>9.6 Google ஆல் வெளிப்படையாக எழுத்துபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால் தவிர நீங்கள் எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் வணிகமுத்திரை, சேவை முத்திரை, வணிகப் பெயர், லோகோ ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது, அவ்வாறு பயன்படுத்துதல் அவ்வகை முத்திரைகள், பெயர்கள் அல்லது லோகோக்களின் உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயனரைப் பற்றிய குழப்பத்தை விளைவிக்கலாம்.</p>
<p><b>10. Google வழங்கும் உரிமம்</b></p>
<p>10.1 Google உங்களுக்கு வழங்கும் சேவைகளின் ஒரு பகுதியாக Google வழங்கிய மென்பொருளைப் (கீழே "மென்பொருள்& quot; என்று குறிப்பிடப்படுகிறது) பயன்படுத்துவதற்கு Google உங்களுக்கு தனிப்பட்ட, உலகளாவிய, ஆதாய உரிமையற்ற, ஒதுக்கப்பட முடியாத மற்றும் விசேஷத்தன்மையற்ற உரிமத்தை வழங்குகிறது. இந்த உரிமமானது, விதிமுறைக்குட்பட்டு சேவைகளின் நன்மைகளைப் பயன்படுத்தி மகிழ்வதற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.</p>
<p>10.2 Google ஆல் எழுத்துப்பூர்வமாக கூறப்பட்டால் அல்லது வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டால் அல்லது சட்டத்தால் கேட்கப்பட்டால் தவிர நீங்கள் பிரதி, மாற்றம், சார்தயாரிப்பு, மீளுருவாக்கம், மறுதொகுப்பு அல்லது மென்பொருளின் மூலக்குறியீட்டை முழுமையாக அல்லது பகுதியாக எடுத்தல் போன்றவற்றை செய்யக் (அல்லது மற்றவர்கள் செய்ய அனுமதிக்க) கூடாது.</p>
<p>10.3 Google உங்களுக்கு தனிப்பட்ட எழுத்துபூர்வ அனுமதி அளித்தால் தவிர, மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உங்களுடைய உரிமைகளை ஒப்படைக்கவோ (அல்லது துணை உரிமம் அளிக்கவோ), மென்பொருளைப் பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பு உரிமத்தை அளிக்கவோ அல்லது உங்கள் உரிமங்களின் பகுதிகளையோ அல்லது முழுமையாகவோ மாற்றம் செய்யவோக் கூடாது.</p>
<p><b>11. நீங்கள் வழங்கும் உள்ளடக்க உரிமம்</b></p>
<p>11.1 சேவையில் அல்லது சேவையைப் பயன்படுத்தி நீங்கள் சமர்ப்பிக்கும், காட்சிப்படுத்தும் அல்லது இடுகையிடும் உள்ளடக்கத்தில் உங்களுக்கு முன்பே உள்ள பதிப்புரிமை அல்லது பிற உரிமைகள் உங்களுக்கு தொடர்ந்து இருக்கும் <p>
<b>12. மென்பொருள் புதுப்பிப்புகள்</b></p>
<p>12.1 நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் அதன் புதுப்பித்தல்களை அவ்வப்போது Google இடமிருந்து தானாகவே பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளக்கூடும். இந்த புதுப்பித்தல்கள் சேவைகளை மேம்படுத்த, மெருகூட்ட மற்றும் இன்னும் முன்னேற்ற வடிவமைக்கப்பட்டவை, இவை சில பிழை திருத்தங்கள், மெருகூட்டப்பட்ட செயல்பாடுகள், புதிய மென்பொருள் தொகுதிகள் மற்றும் முற்றிலும் புதிய பதிப்புகள் ஆகிய வடிவிலும் வழங்கப்படலாம். சேவைகளின் உங்கள் பயன்பாட்டின் ஒரு பகுதியாக இத்தகைய புதுப்பித்தல்களை பெற (மற்றும் Google அவற்றை உங்களுக்கு வழங்க அனுமதிக்க) நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><b>13. 13. Google உடனான உங்கள் உறவை முடித்துக்கொள்ளுதல்</b></p>
<p>13.1 பின் வரும் முறைகளில் உறவை நீங்கள் அல்லது Google முறிக்கும் வரை இந்த விதிமுறைகள் தொடரும்.</p>
<p>Google உடனான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை நீங்கள் நிறுத்திக்கொள்ள விரும்பினால், (அ) எந்த நேரத்திலும் Google க்கு இதுபற்றி அறிவிப்பது (ஆ) நிறுத்திக்கொள்வதற்கான விருப்பத்தை நீங்கள் பயன்படுத்தும் Google வழங்கக்கூடிய அனைத்து சேவைகளின் கணக்குகளை மூடுவதன் மூலமும் இதனை செய்யலாம். இந்த விதிமுறைகளின் தொடக்கத்தில் தரப்பட்டிருக்கும் Google இன் முகவரியில், எழுத்துப்பூர்வமான உங்கள் அறிக்கையை நீங்கள் அனுப்பி வைக்கவேண்டும்.</p>
<p>13.3 உங்களுடனான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் பின்வரும் காரணங்களின் கீழ் Google முறித்து கொள்ளலாம்:</p>
<p>(அ) நீங்கள் இந்த விதிமுறைகளின் எந்த உட்பிரிவையும் மீறும் போது (அல்லது விதிமுறைகளை பின்பற்றவில்லை அல்லது பின்பற்ற முடியாது என உங்கள் செயல்பாடு வெளிப்படையாக காட்டினால்); அல்லது</p>
<p>(ஆ) சட்டத்தினால் Google அவ்வாறு செய்ய நேர்ந்தால் (எ.கா., உங்களுக்கு அளிக்கப்படும் சேவை சட்டத்திற்கு புறம்பானது அல்லது அவ்வாறு ஆகும்போது) அல்லது</p>
<p>(இ) Google உடன் இணைந்து சேவைகளை வழங்கும் கூட்டாளர் நிறுவனம் தனது உறவை உங்களுடன் முறித்து கொள்ளும்போது அல்லது தனது சேவைகளை உங்களுக்கு வழங்குவதை நிறுத்திக்கொள்ளும்போது; அல்லது</p>
<p>(ஈ) நீங்கள் இருக்கும் நாடு அல்லது நீங்கள் சேவைகளைப் பெறும் குறிப்பிட்ட நாட்டிலுள்ள பயனர்களுக்கான சேவைகளை Google மாற்றிக் கொள்ளும் போது அல்லது வழங்குவதை நிறுத்தி கொள்ளும்போது; அல்லது</p>
<p>(உ) Google உங்களுக்கு வழங்கும் சேவை, Google ஐப் பொறுத்தவரை, வணிகரீதியான சாத்தியங்களை இழக்கும் போது.</p>
<p>13.4 இந்த பகுதியில் உள்ள எதுவும் Google இன் உரிமைகளை விதிமுறையின் பிரிவு 4 இன் கீழ் பாதிக்காது.</p>
<p>13.5 இந்த விதிமுறை முடிவுக்கு வரும் போது, Google மற்றும் நீங்கள் பயன்படுத்தியவற்றின் சட்ட உரிமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புகள் (அல்லது வெவ்வேறு நேரங்களில் சேர்ந்த விதிமுறைகள் பயன்பாட்டில் வந்த நாள் முதல்) அல்லது வெளிப்படுத்தப்பட்டவை அனைத்தும் அப்படியே எந்த ஒரு வரையறையும் இன்றி தொடரும், அவை இந்த முடிவினால் பாதிக்கப்பாடாது, பத்தி 20.7 இல் வழங்கப்பட்டுள்ள உட்பிரிவுகள் இவ்வகையான உரிமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புகள் மீது தொடரும்.</p>
<p><b>14. 14. காப்புறுதிகளுக்குள் அடங்காதவை</b></p>
<p>14.1 சட்டப்பூர்வமாக விலக்களிக்கப்படாத அல்லது பொருந்தும் சட்டத்தால் வரம்பிடப்பட்ட இழப்புகளுக்கான GOOGLE இன் காப்புறுதி அல்லது பொறுப்பிற்கு, இந்த விதிமுறை பிரிவுகள் 14 மற்றும் 15 களையும் சேர்த்து விலக்களிக்கப்படாது. புறக்கணிப்பின் மூலம் ஏற்படும் இழப்புகள், ஒப்பந்த மீறல் அல்லது விதிக்கப்பட்ட விதிமுறை மீறல், அல்லது வேண்டுமென்றே அல்லது எதிர்பாராவிதமாக ஏற்படும் இழப்புகளுக்கான சில காப்புறுதிகள் அல்லது நிபந்தனைகளுக்கு விலக்களித்தல் அல்லது பொறுப்பிற்கு வரம்பிடுதல் அல்லது விலக்களித்தல் ஆகியவற்றை, சில அதிகார வரம்புகள் அனுமதிப்பதில்லை. இதேபோல், உங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட சட்டப்பூர்வ வரம்புகள் மட்டும் செயல்படுத்தப்படும், அத்துடன் சட்டத்தால் அனுமதிக்கப்படும் அதிகபட்ச எல்லையின்படி எங்கள் பொறுப்பு வரம்பிடப்படும்.</p>
<p>14.2 சேவைகளை உங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் சேவைகள் "அப்படியே" மற்றும் "கிடைக்கப்பெறும்" நிலையிலேயே வழங்கப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாக புரிந்துகொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>14.3 குறிப்பாக GOOGLE, அதன் உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் கூட்டுநிறுவனங்கள் மற்றும் அதன் உரிமதாரர்கள் பின்வரும் வகைகளில் உங்களுக்கு காப்புறுதி வழங்கவோ அல்லது வெளிப்படுத்தவோ இல்லை:</p>
<p>(அ) சேவையின் பயன்பாடு உங்கள் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்,</p>
<p>(ஆ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது தடங்கலின்றியும், நேரந்தவறாமலும், பாதுகாப்பாகவும், அல்லது பிழையின்றியும் இருக்கும்,</p>
<p>(இ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தி பெறும் எந்த தகவலும் துல்லியமாகவும் அல்லது நம்பகமானதாகவும் இருக்கும், மற்றும்</p>
<p>(ஈ) சேவைகளின் பகுதிகளாக உங்களுக்கு வழங்கப்படும் மென்பொருள்களின் செயல்பாடு அல்லது செயல்படும் விதம் ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் சரி செய்யப்படும்.</p>
<p>14.4 சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கும் எந்த ஒரு தகவலும் அல்லது பெறும் தகவலும் உங்களுடைய சொந்த விருப்பம் மற்றும் பொறுப்பிற்குரியது மேலும் இது போன்றவற்றைப் பதிவிறக்குவதால், உங்கள் கணினி அல்லது சாதனத்தின் செயலிழப்பு அல்லது தரவு இழப்பு போன்றவை ஏற்படுமானால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.</p>
<p>14.5 சேவைகளின் மூலமாக GOOGLE இடமிருந்து பெறப்படும் வாய்மொழியான அல்லது எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் அல்லது தகவல்கள் விதிமுறையில் வெளிப்படையாக கூறப்படாத எந்த காப்புறுதியையும் வழங்கவில்லை.</p>
<p>14.6 மேலும், குறிப்பிடப்பட்ட காப்புறுதிகள், வியாபாரத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட தேவைக்கோ ஏற்றதாக இருக்கும், விதிமுறையை மீறாததாக இருக்கும் என்பது போன்ற காப்புறுதிகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட (ஆனால் அவை மட்டுமின்றி) வெளிப்படையான அல்லது குறிப்பிடப்பட்ட எந்த காப்புறுதி அல்லது அது பொன்ற நிபந்தனை ஆகியவற்றை GOOGLE வெளிப்படையாக கைத்துறக்கிறது.</p>
<p><b>15. பொறுப்பிற்கான வரம்பு</b></p>
<p>15.1 மேலே உள்ள பத்தி, 14.1 இல் கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் உட்பட்டு, GOOGLE, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமதாரர்கள் பின்வருவனவற்றுக்கு பொறுப்பாக மாட்டார்கள் என்பதை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள்:</p>
<p>(அ) எந்த வகையான நேரடியான, மறைமுகமான, நிகழ்வு சார்ந்த, தொடர் விளைவுகள் அல்லது உங்களுக்கு ஏற்படும் தவறான இழப்புகள், எந்த பொறுப்பாதல் தத்துவத்தின் கீழும் நேரிடும் எந்தவகையான இழப்புகள் ஆகியவை. இவற்றுடன் எந்த வகையான இலாபமிழப்பு (நேரடியாக அல்லது மறைமுகமாக பெறப்பட்டவை), நற்பெயர் அல்லது வணிக பெருமை இழப்பு, எந்த தரவு இழப்பு, மாற்று பொருள்களை அல்லது சேவைகளைப் பெறுதலுக்கான விலை அல்லது பிற தவிர்க்க முடியாத இழப்புகள்;</p>
<p>(ஆ) பின்வரும் காரணங்களினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவையும் சேர்த்து (ஆனால் அவை மட்டுமின்றி) உங்களால் ஏற்படும் ஏதேனும் இழப்புகள் அல்லது சேதங்கள்:</p>
<p>(I) சேவைகளில் தோன்றும் விளம்பரங்களின் ஸ்பான்சர்கள் அல்லது விளம்பரதாரர்களுடனான உங்கள் உறவு அல்லது பரிமாற்றம் சார்ந்து, அல்லது விளம்பரங்களின் முழுமை, துல்லியம் அல்லது இருப்பு சார்ந்து நீங்கள் பெறும் நம்பிக்கை;</p>
<p>(II) சேவைகளுக்கு GOOGLE செய்யும் எந்தவிதமான மாற்றங்கள் அல்லது நிரந்தரமான அல்லது தற்காலிகமான சேவை (அல்லது சேவைக்குள்ளிருக்கும் ஏதேனும் அம்சங்களின்) வழங்கல் நிறுத்தம்;</p>
<p>(III) சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது சேவைகளின் மூலம் நிர்வகிக்கப்படும் அல்லது பரிமாற்றப்படும் எந்த உள்ளடக்கம் அல்லது தொடர்புத் தரவுகளின் நீக்கம், சிதைவு அல்லது சேமிக்க முடியாமல் போகுதல்;</p>
<p>(IV) நீங்கள் GOOGLE க்கு சரியான கணக்கு தகவல்களை வழங்க தவறுவது;</p>
<p>(V) உங்கள் கடவுச்சொல் அல்லது மற்ற கணக்கு தகவல்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறுதல்;</p>
<p>15.2 மேலே பத்தி 15.1 இல் உங்களுக்கு அளிக்கப்பட்ட GOOGLE பொறுப்பின் மீதான வரம்புகள் யாவும், முன்பே GOOGLE மூலம் அறிவுறுத்தப்பட்டாலும் அல்லது அறிவுறுத்தப்படவில்லை என்றாலும் அல்லது ஏதேனும் இழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகும்போது பொருந்தும்.</p>
<p><b>16. பதிப்புரிமை மற்றும் வர்த்தகக் குறியீட்டு கொள்கைகள்</b></p>
<p>16.1 சர்வதேச அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை (ஐக்கிய நாடுகளின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமை சட்டத்தையும் சேர்த்து) பின்பற்றாத சந்தேகத்துக்குரிய பதிப்புரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளுக்கு பதிலளிப்பது மற்றும் மீண்டும் மீண்டும் இத்தகைய மீறலைச் செய்பவர்களின் கணக்கை நிறுத்துவது Google இன் கொள்கை ஆகும் Google கொள்கை தொடர்பான விவரங்கள் இங்கு: <a href="http://www.google.com/dmca.html"> http://www.google.com/dmca.html</a>.</p>
<p>16.2 Google இன் விளம்பர வணிகத்தைச் சார்ந்து வணிக முத்திரை குற்றச்சாட்டு செயல்பாடுகளை Google இயக்கி வருகிறது, விவரங்கள் இங்கே <a href="http://www.google.com/tm_complaint.html"> http://www.google.com/tm_complaint.html</a>.</p>
<p><b>17. விளம்பரங்கள்</b></p>
<p>17.1 விளம்பரப்படுத்தல் வருமானத்தின் மூலம் சில சேவைகள் ஆதரிக்கப்படுகின்றன மேலும் விளம்பரங்கள் மற்றும் தர உயர்வுகளின் மூலமாகவும் அவை காண்பிக்கப்படக்கூடும். சேவைகளில் சேமிக்கப்பட்டிருக்கக்கூடிய அல்லது பிற தகவலின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விகளில் சேமிக்கப்பட்டுள்ள தகவலின் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டே இந்த விளம்பரங்கள் இருக்கக்கூடும்.</p>
<p>17.2 சேவைகளில் Google இன் விளம்பரங்களின் முறை, வடிவம் மற்றும் அளவு உங்களுக்கு தெரிவிக்கப்படாமலே மாற்றப்படலாம்.</p>
<p>17.3 Google அதனுடைய சேவைகளை அணுக மற்றும் பயன்படுத்த உங்களுக்கு உரிமை வழங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டு, Google இது போன்ற விளம்பரங்களை சேவைகளில் வெளியிட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><b>18. பிற உள்ளடக்கங்கள்</b></p>
<p>18.1 மற்ற வலைத்தளங்கள் அல்லது உள்ளடக்கங்கள் அல்லது தகவல்களுக்கான மிகை இணைப்புகளை சேவைகள் கொண்டிருக்கக்கூடும். Google அல்லாத மற்ற நிறுவனங்கள் அல்லது நபர்கள் வழங்கும் எந்தவகையான வலைத்தளங்கள் அல்லது தகவல்கள் மீது Google க்கு எந்தவித அதிகாரமும் இல்லை.</p>
<p>18.2 இது போன்ற வெளிப்புற வலைத்தளங்கள் அல்லது ஆதாரங்கள் ஆகியவை அணுகக் கிடைப்பதற்கு Google எவ்வகையிலும் பொறுப்பேற்காது என்பதையும், இவ்வகை வலைத் தளங்கள் அல்லது ஆதாரங்கள் ஆகியவற்றில் உள்ள அல்லது ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் விளம்பரங்கள், தயாரிப்புகள் அல்லது மற்றவைக்கு எவ்வித ஆதரவையும் Google வழங்கவில்லை என்பதையும் நீங்கள் அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>18.3 அவ்வகையான வெளித்தளங்கள் அல்லது தகவல் ஆதாரங்கள் ஆகியவற்றினால் நீங்கள் பெறக்கூடிய எவ்வகை இழப்பு அல்லது குறைபாடுக்கும் Google பொறுப்பாகாது என்பதையும், இவ்வகை வலைத்தளங்கள் அல்லது தகவல் ஆதாரங்கள் ஆகியவற்றில் உள்ள அல்லது ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் விளம்பரங்கள், தயாரிப்புகள் அல்லது மற்றவையின் முழுமை, துல்லியம் அல்லது இருப்பு ஆகியவற்றின் மீது நீங்கள் வைக்கும் எவ்வகை நம்பிக்கையின் காரணமாக நீங்கள் பெறக்கூடிய எவ்வகை இழப்பு அல்லது குறைபாடுக்கும் Google பொறுப்பாகாது என்பதையும் நீங்கள் அறிந்து அதனை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><b>19. விதிமுறையில் மாற்றங்கள்</b></p>
<p>19.1 உலகளாவிய விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் அவ்வப்போது Google மாற்றங்களை செய்யலாம். இந்த மாற்றங்கள் செய்யப்பபடும்போது, <a href="http://www.google.com/accounts/TOS?hl=en">http://www.google.com/accounts/TOS?hl=en</a> இல் வழங்கப்பட்டுள்ள உலகளாவிய விதிமுறைகளின் புதிய நகலை உருவாக்கும், புதிய கூடுதல் விதிமுறைகள் ஏதேனும் சேர்க்கப்பட்டால், அவை, அது தொடர்பான சேவைகளில் அல்லது சேவைகளின் மூலமாக உங்களுக்குக் கிடைக்கும்.</p>
<p>19.2 உலகளாவிய விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட தேதிக்குப் பின்னர் நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டு பயன்படுத்துவதாக Google கருதும் என்பதை நீங்கள் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p><b>20. 19. பொது சட்ட விதிமுறைகள்</b></p>
<p>20.1 சில நேரங்களில் சேவைகளைப் பயன்படுத்தும்போது (பயன்படுத்துவதால், அல்லது சேவைகளின் பயன்பாட்டின் மூலமாக) வேறு நபர் அல்லது நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் சேவையைப் பயன்படுத்த அல்லது மென்பொருளைப் பதிவிறக்கம் செய்ய, அல்லது பொருட்களை வாங்க நேரிடலாம். இவ்வகை வெளி சேவைகளை, மென்பொருள்களை அல்லது பொருட்களை பயன்படுத்துவது உங்களுக்கும், தொடர்புடைய நிறுவனம் அல்லது நபருக்குமான தனியான விதிமுறைகள் மூலம் கையாளப்படலாம். அவ்வாறான நிலையில், உங்களுக்கும் மற்ற தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குமான சட்டப்பூர்வ உறவை விதிமுறைகள் பாதிக்காது.
<p>20.2 இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Google க்கும் இடையே முழுமையான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை அமைக்கிறது மற்றும் உங்களின் சேவைகள் பயன்பாட்டை (தனியான ஒப்பந்தத்தின் கீழ் Google உங்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளை தவிர்த்து) நிர்வகிக்கிறது. மேலும் உங்களுக்கும் Google க்கும் இடையே சேவைகள் தொடர்பாக முன்னர் செய்யப்பட்ட எந்தவகை ஒப்பந்தத்தையும் இது பதிலீடு செய்கிறது.</p>
<p>20.3 விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை உங்களுக்கு, மின்னஞ்சல் மூலமாக, சாதாரண அஞ்சல் அல்லது சேவைகளில் வெளியிடுதல் மூலமாக Google உங்களுக்கு வழங்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>20.4 விதிமுறைகளில் உள்ள சட்டப்பூர்வ உரிமை அல்லது தீர்வை (அல்லது ஏதேனும் பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் Google நன்மையடையக்கூடிய செயல்பாட்டை) Google செயல்படுத்தாவிட்டால் அல்லது நடைமுறைப்படுத்தாவிட்டால், அதை Google இன் எழுதப்பட்ட அனுமதி அறிக்கையாகக் கருதக்கூடாது, அந்த உரிமைகளும் தீர்வுகளும் அப்போதும் Google க்கு உள்ளது.</p>
<p>20.5 இந்த விதிமுறை, அதன் உட்பிரிவுகள், விதிகள் தொடர்பாக எவ்வகை சட்ட அமைப்பும் முடிவெடுக்கக்கூடுமேயானால் அது செல்லாது. பின்னர் அவ்வகையிலான உட்பிரிவு மற்றவைகளை பாதிக்காவாறு அகற்றப்படும். மீதியுள்ள விதிமுறையின் உட்பிரிவுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் மற்றும் பின்பற்றத்தக்கதாகவும் இருக்கும்.</p>
<p>20.6 Google தலைமையில் இயங்கும் கூட்டு நிறுவனங்களின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த விதிமுறையால் நன்மையடையும் மூன்றாம் தரப்பினராக இருப்பர் என்பதையும் விதிமுறைகளில் உள்ள, அந்த பிற நிறுவனங்களுக்கு (அல்லது அவர்கள் சார்பானவர்களுக்கு) நன்மை தரக்கூடிய அம்சங்கள் எதனையும் நேரடியாக செயல்படுத்தவும் பின்பற்றவும் அவர்களுக்கு உரிமை உள்ளது என்பதையும் நீங்கள் ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள். இவற்றைத் தவிர, விதிமுறைகளுக்கு வேறு எவரும் அல்லது எந்த நிறுவனமும் நன்மையடக்கூடிய மூன்றாம் தரப்பினராக இருக்கமாட்டார்கள்.</p>
<p>20.7 விதிமுறைகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் அமைந்த உங்களுக்கும் Google க்குமான உறவு, சட்ட உட்பிரிவுகளின் முரண்பாடுகளை சாராமல் கலிஃபோர்னியா மாகாணத்து சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. விதிமுறைகளைச் சார்ந்து எழக்கூடிய எந்தவகையான சட்டச்சிக்கல்களையும், கலிஃபோர்னியாவின் சாண்டா க்ளாராவில் உள்ள நீதிமன்றங்களில் சமர்பிக்க நீங்களும், Google-லும் ஒப்புக்கொள்கிறீர்கள். இவற்றைத் தவிர எந்தவகையான உடனடி சட்டத் தீர்வுகளையும் (அல்லது அதுபோன்ற எந்தவகை சட்டத்தீர்வு) எந்த சட்டவிதிகளையும் Google பெற்றுக்கொள்ளலாம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.</p>
<p>ஆகஸ்ட் 15, 2008</p>
<br />
</body>
</html>
|